Monday, February 19, 2018

Tamil mozhi Varalaattru Unmaigal

அதிரம்பாக்கத்தில் இருந்து கிடைத்துள்ள ஆய்வுமுடிவுகள் "ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் தோன்றினான்" எனும் தியரியின் கால அளவுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. உலகின் புகழ்பெற்ற ஜர்னலான நேச்சர் ஜர்னலில் பிப் 1 அன்று இந்த ஆய்வு வெளியாகுள்ளது. அதனால் முற்றிலும் நம்பகமான ஆய்வு என்றே கூறலாம்

இதுநாள்வரை என்ன சொன்னார்கள் என்றால் சுமார் 140,000 ஆண்டுகளுக்கு முன்பு நூறு மனிதர்கள் ஆபிரிக்காவை கடந்து அரேபியாவில் காலடி எடுத்து வைத்தார்கள் எனவும் அவர்களில் ஒரு பிரிவினர் வடக்கே ஐரோப்பாவுக்கு போக, இன்னொரு பிரிவினர் கிழக்கே சீனா, இந்தியாவுக்கு பரவினார்கள் எனவும் இந்த 100 மனிதர்களில் இருந்துதான் ஒட்டுமொத்த ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க குடிகள் அனைத்தும் தோன்றின என்றார்கள்.

ஆனால் அதிரம்பாக்கத்தில் கிடைத்துள்ள கற்கால கருவிகளின் கால அளவுகள் 172,000 ஆன்டு முதல் 385,000 ஆண்டுவரை என தற்போது தகவல்கள் வருகின்றன. இது இந்த தியரியின் அடித்தளத்தை அசைத்துப்பார்த்துள்ளது.

140,000 ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் இந்தியாவுக்கு வந்தான் என்றால் 385,000 ஆண்டுகள் பழைமையான இந்த கல்கருவி அதிரம்பாக்கத்துக்கு எப்படி வந்தது?

எப்படியோ குறைந்த பட்சம் இந்தியாவில் மனித இன வரலாறு தமிழகத்தில் இருந்துதான் துவங்குகிறது என்பது அதிரம்பாக்கத்தின் மூலம் உறுதியாகிறது.  இதற்கான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டால் மேலும் பல தியரிகளின் அடித்தளம் அசைக்கபடும். நடக்குமா?

No comments:

Post a Comment

  Part 1 – Positive Impacts of COVID – mRNA Vaccine We thought of sharing some positive impacts of COVID. We thought this is the right t...