Monday, October 16, 2017

’பள்ளி வளாகத்திலேயே இயற்கை விவசாயம்’ - அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்



பள்ளியின் ஒரு பகுதியில் வேலி அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து அசத்தி வருகிறார்கள் அரசுப்பள்ளி மாணவர்கள்.
அரசுப்பள்ளி மாணவர்கள். மாணவர்களுக்கு உதவியாக ஆசியர்களும், தலைமை ஆசிரியரும் உதவி புரிந்து வருகிறார்கள்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் பாலமுருகனிடம் பேசினோம், எங்கள் பள்ளி காவேரி கரையை ஒட்டிய பகுதி என்பதால் மண் வளம் மிகுந்தது. ஆகையால், பள்ளியில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டுமென நினைத்துதான் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது அந்நிய குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டுமென பாடம் நடத்தும்போது கற்பித்தோம். அப்போது ஒரு மாணவன் எழுந்து சார் அதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது உண்டா என்று கேட்டான். அப்போதுதான் நாம் இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்லவேண்டுமென அறிவுரை கூறினேன். அதன்பிறகு மாணவர்களே எப்படி இயற்கை விவசாயத்தை செய்வது எனக் கேட்டார்கள். அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயம் செய்வது என முடிவது செய்து பள்ளி மைதானத்தின் ஓரமான பகுதியில் அரை செண்டு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வதாக மாணவர்களின் ஆர்வத்தை தலைமை ஆசிரியரிடமும் எடுத்துச் சொன்னேன்.
தலைமை ஆசிரியரும் அதற்கு எந்தவிதமான மறுப்பு தெரிவிக்காமல் உடனே செய்யுங்கள் என்று ஊக்குவித்தார். பள்ளி வளாகத்தின் ஒரு ஓரத்தில் மாணவர்களே மண்வெட்டி வைத்து கொத்தி அதில் வெண்டைக்காய், கத்தரி ஆகிய விதைகளை நட்டு வைத்தோம். தினம் மாணவர்கள் மதிய இடைவேளையில் போய் பார்த்து தண்ணீர் தேவைப்பட்டால், தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர். பூச்சி மருந்து பயன்படுத்தாமல் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து அதிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றினை பூச்சி மருந்தாகத் தெளித்தனர். இப்போது  மாணவர்கள் வெண்டை, கத்திரி அறுவடையும் செய்துள்ளார்கள் ’ என்றார்.
Article By Vikatan

No comments:

Post a Comment

  Part 1 – Positive Impacts of COVID – mRNA Vaccine We thought of sharing some positive impacts of COVID. We thought this is the right t...